2021 வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கல்

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் எண்ணக்கருவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(26) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை ஹல்லாஜ் தகவல் வள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களான .சீம்.எம்.நுஹ்மான், என்.எம்.சுக்ரி, .சீ.எம்.நௌபர், எம்.என்.கே.நௌபர் காரியப்பர், .எம்.சுல்பிகார், எம்.எம்.எஸ்.ஜெலீலா, எம்.எல்.கரீமுன் நிஸா, எஸ்.எப்.ருஷ்தா, எப்.எப்.சமீஹா ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் குறித்த வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 92 மாணவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது கௌரவ மாநகர சபை உறுப்பினர் .சீ.எம்.நுஹ்மான், மாநகர ஆணையாளர் .ரீ.எம்.றாபி, மாநகர சபை கணக்காளர் எப். எம்.பர்ஹான், மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Comments