இலங்கை சனநாயக சோஷலிஸ குடியரசின் 74 ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்வு

 

அக்கரைப்பற்று மாநகர சபை வெகு விமர்சையாக ஏற்பாடு செய்த இலங்கை சனநாயக சோஷலிஸ குடியரசின் 74 ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்வுகள் நேற்று (04) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று நீர்ப் பூங்கா சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது

இதில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும்முன்னாள் அமைச்சரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்..எல்.எம்.அதாஉல்லா (எம்.பி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து சுதந்திர தின சிறப்பு பேருரை நிகழ்த்தினார். இதன் போது அக்கரைபற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. எம்.. றாசீக், கௌரவ மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மும்மதப்பெரியார்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் .ரீ.எம்.றாபி, பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார்அனைத்து நிறுவனங்களின் தலைவர் மற்றும் திணைக்கள தலைவர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்

இதன் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் கலை,கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதி அக்கரைப்பற்று நீர்ப் பூங்காவில் விசேடமாக அமைக்கபட்ட மிதக்கும் மேடையில் நின்ற படி பிராந்திய மாணவ,மாணவர்கள் ஒழுங்கு செய்த கலை,கலாசார நிகழ்வுகளையும் மற்றும் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.






Comments