மாநகர முதல்வர் இறைச்சி கடைகளுக்கு திடீர் விஜயம்

 

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகளின் தற்போதைய விற்பனை நடைமுறைகள் குறித்து ஆராயும் நோக்கிலான திடீர் கள விஜயமொன்றினை இன்று (01)கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் மேற்கொண்டிருந்தார். இதில் டிஜிட்டல் அல்லாத சாதாரண தராசுகள் பாவித்த ஒரு சில இறைச்சி கடைக்காரர்களின் தராசுகள் மாநகர சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோதமான முறையில் கடைகளும் இனம் காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இக்கள விஜயத்தின் போது ஒரு சில இறைச்சி கடைகளில் தீர்மானிக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் விலைப்பட்டியலை பேணாதவர்களுக்கும் கௌரவ மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் மாநகர சபை முதல்வரின் தலைமையில் மாநகர சபையினருக்கும்- பிரதேச மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய பொதுமக்களுக்கு சரியான முறையில் இறைச்சி விநியோகம் இடம்பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் அடிப்படையில் இத்திடீர் விஜயம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இக்கள விஜயத்தின் போது மாநகர சபை உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.




Comments