இறைச்சிக்கடை இழுத்து மூடப்பட்டது.!

மாநகர சபையின் விலை நிர்ணய தீர்மானத்திற்கு மாற்றமாக செயல்பட்ட இறைச்சிக்கடை ஒன்று முதல்வரின் அறிவுறத்தல்களுக்கு அமைய அதிகாரிகளால் இன்று இழுத்து மூடப்பட்டது.

மக்களின் வேண்டுகோளுக்கு அமைய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இறைச்சிகடைகள் தொடர்சியாக இருந்ததால் இன்று ஒரு விற்பனையாளர் 800g + 200g என்ற முறை இருக்க வேண்டும் என்ற போதும், சுமார் 600g இறைச்சி 400g முள்ளுடன் விற்பனை செய்ததை ஆதார பூர்வமாக நிரூபித்ததன் பின் அக்கடை இழுத்து மூடப்பட்டுள்ளது. ஏனைய இறைச்சி விற்பனை நிலையங்களும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்பதை மாநகர மக்களுக்கு அறியத்தருவதோடு, பொதுமக்களும் உரிமையுடன் உங்களின் பணத்திற்கு ஏற்ற பொருளை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்றும் , முறைகேடுகளை 067 22 77 275 என்ற இலக்கத்துடன் அறியத்தரலாம் என்றும் முதல்வர் மாநகர மக்களை கேட்டுக்கொள்கிறார்.!


Comments